மன்னார்குடி அருகே ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடநதது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் கிராமத்தில் தொன்மைசிறப்பு மிக்கதும், பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குவதுமான ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன் கோயில். இக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 14ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய யாகசாலை வேள்வி பூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக்கொண்டு நான்கு காலமாக நடைபெற்று வந்தன. தொடர்ச்சியாக இன்று 4ம்கால யாகசாலை பூஜையின் நிறைவாக மகா பூர்ணாகுதி ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சுமந்து ஆலய பிரகாரத்தினை வலம்வந்து ஆலய மூலஸ்தான விமானத்திற்கு கும்பாபிஷேகம் செய்துவைத்தனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆள்காட்டி மகாமாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் மற்றும் ஆலயத்தின் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!