மாநில ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி சென்ட்ரல் எக்சலன்ஸ் அணி முதலிடம்
பரிசு கோப்பையுடன் கோவில் பட்டி அணி வீரர்கள்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மன்னை ஹாக்கி கிளப் நடத்தும் கோபாலகிருஷ்ணன் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 6ம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடந்த போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள தலைசிறந்த 18க்கும் மேற்பட்ட விளையாட்டு அணிகள் பங்கேற்றன. இறுதிபோட்டிகளுக்கு கோவில்பட்டி சென்ட்ரல் எக்சலன்ஸ் அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். அணியும் களமிறங்கின. இதில் கோவில்பட்டி சென்ட்ரல் எக்சலன்ஸ் அணி மூன்று கோல் அடித்து முதல் இடத்தை பெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற கோவில்பட்டி அணிக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கபரிசு மற்றும் கோப்பையும் , சென்னை எஸ்.ஆர்.எம். அணிக்கு 2ம் பரிசு ரூ 25 ஆயிரம் மற்றும் கோப்பையும் , 3ம் பரிசு பெற்ற பாண்டிச்சேரி ஹாக்கி அணிக்கு ரூ 20 ஆயிரம் ரொக்க பரிசுத்தொகை மற்றும் கோப்பையும், 4ம் பரிசு பெற்ற தமிழ்நாடு தபால்துறை அணிக்கு ரூ. 15 ஆயிரம் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.
இவற்றை மன்னை ஹாக்கி கிளப் தலைவர் அசோகன் டி.எஸ்.பி. (பயிற்சி) இமயவரம்பன், மனித உரிமை பிரிவு மாவட்ட அரசு வழக்கறிஞர் கலைவாணன், அமெச்சூர் கபடி கழக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu