மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மாடுகளுக்கு இலவச வைக்கோல்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மாடுகளுக்கு இலவச வைக்கோல்
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் மாடுகளுக்கு வைக்கோல் இலவசமாக வழங்கப்பட்டது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மாடுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் சேவை சங்கம் சார்பில் வைக்கோல் இலவசமாக வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.

இந்த மாடுகளுக்கு தேவையான வைக்கோல் இல்லையென கடந்த 5 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் , பேஸ்புக் முகநூலில் வைக்கோல் தேவை என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மன்னார்குடியில் உதயநிதி ஸ்டாலின் சேவை மையத்தின் சார்பில் இலவசமாக மாடுகளுக்கு தேவையான வைக்கோல்களை அரசு மாவட்ட வழக்கறிஞர் கலைவாணன், வழங்கினார்.

இதில் சேவை மையத்தின் நிர்வாகிகள் பிரசன்னா , மதி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!