ஓட்டல் உரிமையாளர்களுக்கு திருவாரூர் உணவு பாதுகாப்பு அதிகாரி வேண்டுகோள்

மன்னார்குடியில் நடந்த ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி செளமியா பேசினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுபாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் செளமியா தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் கருணாநிதி ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி சங்கரசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி செளமியா பேசுகையில் தீபாவளி பண்டிகையையொட்டி உணவு கூடங்கள் மற்றும் ஸ்வீட்ஸ் ஸ்டால்களில் தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமான எண்ணெயில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். கொனோரா பரிசோதனை மேற்கெண்டு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அசைவ உணவகங்களில் பிரிஷர் இருக்க கூடாது அன்றைய தேவைக்கேற்ப அசைவ பொருட்களை வாங்கி அன்றே விற்பனை செய்ய வேண்டும். ஓட்டல்களில் வேலை செய்ய வரும் ஊழியர்களிடம் அவசியம் வெப்பமானி கொண்டு தினமும் சோதனை செய்ய வேண்டும்.
சமையலறையில் உணவு தயாரிப்பவர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் முகக்கவசம், முழு உடற்கவசம், தலையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். காய்கறி மற்றும் அரிசி உள்ளிட்டவற்றை குளோரின் நீரில் நன்கு சுத்தப்படுத்தி உணவு தயாரிக்க வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்றி குறிப்பிட்ட சதவித இருக்கைகள் மட்டும் கொண்டு செயல்பட வேண்டும். உணவு அருந்த வருபவர்களில் யாருக்கேனும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல்உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை உணவகத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டாம். உணவகங்களில் உணவருந்தும் அனைத்து மேஜைகளிலும் கை கழுவும் திரவம் அவசியம் வைத்திருக்க வேண்டும். வேலை செய்யும் அனைவரும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளவேண்டும் சுகாதாரமான முறையில் உணவு பரிமாற வேண்டும். மேலும், உணவருந்த வரும் பொதுமக்களுக்கு சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிவிப்புகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் மன்னார்குடி உணவுபாதுகாப்பு அலுவலர் முருகேசன், நீடாமங்கலம் உணவுபாதுகாப்பு அலுவலர் கர்ணன் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu