மன்னார்குடி டைலர் கடையில் பயங்கர தீ விபத்து

மன்னார்குடி டைலர் கடையில் பயங்கர தீ விபத்து
X

தீ விபத்தில் சேதமடைந்த தையல் கடை. 

மன்னார்குடியில் பிரபல டைலர் கடையில் தீ விபத்து 20 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆசாத் தெருவில் வசிப்பவர் சூரியநாராயணன். இவர் பெரிய கடைத்தெருவில் உள்ள பிரபல டைலர் கடையை, 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர். தீயணைப்புதுறை வீரர்கள் கடையின் உள்பக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் 28 பவர் தையல் மிஷின்கள், பேண்ட், சர்ட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகி, சுமார் 20 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனால் அந்த பகுதி சிறுது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி , வட்டாட்சியர் ஜீவானந்தம், அரசியல் கட்சியினர் பார்வையிட்டு கடையின் உரிமையாளர் சூரிய நாராயணனிடம் ஆறுதல் கூறினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!