வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை
வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி , கூத்தாநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா இளம் நடவு பயிர்கள் அழகி சேதமடைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பெருத்த கவலையில் ஆழ்ந்து வருகின்றனர் .இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அமைச்சர், குழு அமைத்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் விவசாயிகள் குறைகளை கேட்டறிந்து முதலமைச்சரிடம் ஆய்வறிக்கையை சமர்பித்தனர். அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர் ஹெக்டர்க்கு ரூ.20 ஆயிரமும் மழையால் இளம் நடவு பயிர்கள் சேதமடைந்ததற்கு ஹெக்டர்க்கு ரூ.6038 நிவாரண இடிபொருட்கள் வழங்கபடும் என அறிவித்தார்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். தொடர்ந்து பெய்த கனமழையில் சேதமடைந்த இளம் நடவு பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் அறிவித்து, அதில் ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையாகவும் மீதமுள்ள ரூ.10 ஆயிரத்திற்கு விவசாய இடுபொருட்கள் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும் முதல்வர் விவசாயிகளின் நலன் கருதி எங்களுக்கு நிவாரணம் வழங்குவார் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu