திருவாரூர் மாவட்டத்தில் போலி மது பாட்டில் தயாரித்து விற்ற 2 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில்  போலி மது பாட்டில் தயாரித்து விற்ற 2 பேர் கைது
X

திருவாரூர் மாவட்டத்தில் போலி மது தயாரித்த  2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மது பாட்டில்களை தயாரித்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்களை தயார் செய்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போலி மது பாட்டிலை தயாரித்து விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மன்னார்குடி பகுதியில் போலி மது பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.இதையடுத்து அப்பகுதியில் போலி மது தயாரித்து விற்பனை செய்த மன்னார்குடி மேலநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சத்தியமூர்த்தி, மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒத்தவீடு கலைச்செல்வன் என்பவரது மகன் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் ,140 லிட்டர் சாராயம் ,புதுச்சேரி மாநில 25 காலி மதுபாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!