வலங்கைமான் அருகே 28 ஆண்டு காலமாக மின் இணைப்பிற்காக போராடும் விவசாயி
வலங்கைமான் அருகே குடிசை வீட்டின் மின் இணைப்பிற்காக விவசாயி 28ஆண்டுகளாக போராடி வருகிறார்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவர் விவசாய கூலி வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், 3மகள்களும் உள்ளனர். இதில் இரு மகளுக்கு திருமணமான நிலையில் மூன்றாது மகளான தயா அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்புபடித்து வருகிறார்.
கடந்த 28 ஆண்டுகாலமாக இரவு நேரத்தில் தெருவிளக்கு வெளிச்சத்திலும்,மண்ணெண்னை மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு பொழுதை கழித்து வரும்தொழிலாளி அன்பு தனது வீட்டுக்கு மின்வசதி செய்துதர கடந்த 28 ஆண்டுகாலமாக மின்வாரியத்தின் படிக்கட்டுகளை ஏறி இறங்கியபோதிலும் மின்வாரியத்தினர் இவர்களது குடும்பத்திற்கு மட்டும் இருளையேபரிசாக வழங்கி வருவது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
ஒரு வீட்டிற்கு மின்வசதி பெற அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் மின்வாரியத்தில் அன்பு வழங்கிய போதிலும் மின்வாரியம் இவரது குடும்பத்திற்கு மட்டும் மின்இணைப்பு வழங்காமல் புறக்கணித்து வருகிறது. விவசாய கூலி தொழிலாளியான அன்பு தனது 3 மகள்களில்இரண்டு மகள்களை சரிவர படிக்கவைக்க முடியாமல் திருமணம் செய்து கொடுத்து விட கடைசி மகள் தயாவை யாவது நல்ல நிலையில்படிக்கவைத்து அதன் மூலம் நல்ல வேலையினை பெற்று தரவேண்டும் என்ற ஆசையோடு இருந்துவருகிறார்.
ஆனால் மின்சார வசதியின்றி காணும் தனது வீட்டின் நிலைகாரணமாக தயாஅவதியுற்று வருவதால் பள்ளியில் கொடுத்த வீட்டுபாடங்களை இரவு நேரங்களில் சரிவர எழுத முடியாமலும், படிக்க முடியாமலும் கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாகிவரும் மாணவி தயா பல நேரங்களில் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டிலேயே தங்கி விடுகிறார்.
தனது கடைசி மகளையாவது நல்லநிலையில்படிக்கவைக்கவேண்டும் என்ற கனவை நனவாக்கும் வகையிலும், 28 ஆண்டுகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுதொழிலாளி அன்பு குடும்பத்திற்கு மின்இணைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu