மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு எம்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி

மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு  எம்.பி. வீட்டில் கொள்ளை முயற்சி
X
கொள்ளை முயற்சி நடந்த டி.ஆர். பாலு எம்.பி.யின் வீடு.
மன்னார்குடி அருகே டி.ஆர்.பாலு எம்.பி. வீட்டில் மர்ம நபர்கள் திருட முயற்சித்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள தளிக்கோட்டையில் தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு எம்.பி.வீடு உள்ளது. அந்த வீட்டை எப்போதாவது பயன்படுத்துவார்கள், இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் யாரும் இல்லாத காரத்தினால் இன்று அதிகாலை டி.ஆர்.பாலுவின் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். அதுபோல் அருகாமையில் உள்ள வீட்டில் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பத்தினர் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் ஓடிவிட்டார்கள்.

இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தடவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். டி.ஆர்.பாலு வீட்டில் நகைகள் இல்லாதால் திருடு போகவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதுபோல் அருகாமையில் உள்ளவர் வீட்டிலிருந்தும் எதுவும் திருடுபோகவில்லை, அக்கம்பக்கத்தினர் சத்தம்கேட்டு வந்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!