மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு தி.மு.க.- அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு தி.மு.க.- அரசியல் கட்சியினர்  மாலை அணிவிப்பு
X
மன்னார்குடியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
மன்னார்குடியில் தி.மு..க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தந்தை பெரியாரின் 143 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் .தி.மு.க.,திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கலந்துகொண்டார். மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தி.மு.க. கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம் , விடுதலை சிறுத்தை கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் , ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமூக நீதிநாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!