மக்கள் விரோத பாஜகவை வீழ்த்த திமுகவுடன் கூட்டணி தொடரும் : சிபிஎம் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
மன்னார்குடியில் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஜி. ராமகிருஷ்ணன்.
மக்கள் விரோத பாஜக கட்சியை வீழ்த்த திமுகவுடன் கூட்டணி தொடரும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிற 27- ஆம் தேதி விவசாயிகள் நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்தை ஆதரித்து தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள வேண்டும் .
தமிழகத்தில் இப்போராட்டத்தை முழு வெற்றி பெற செய்ய வேண்டும் . அதில் விவசாயிகள்,விவசாய கூலி தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்கவேண்டும் என மாவட்ட, மாநில அளவில் கட்சிநிர்வாகிகளிடையே போராட்ட தயாரிப்பு ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 42 மட்டுமே, மீதம் உள்ள தொகைக்கு மத்திய அரசு கொண்டு வந்த கலால் வரிதான் காரணம். மத்திய அரசு போட்டுள்ள கலால் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டுபோகும் . நீட் தேர்வு குறித்து மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதவிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும். மக்கள் விரோத பாஜக கட்சியை வீழ்த்த திமுகவுடன் கூட்டணி தொடரும் . உள்ளாட்சி தேர்தலில் பதவியை பொறுத்து நான்கு வாக்குகள் அளிக்க வேண்டும். அதனை பொருத்து உடன்பாடுகள் ஏற்படும். சில இடங்களில் முரண்பாடுகள் ஏற்படும் இதனை தவிர்க்க முடியாது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu