ஊழலை நிறுத்தலைன்னா போராடுவோம் : மன்னார்குடியில் விவசாயிகள் ஆவேசம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா கோட்டூர் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் ஊழலை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா கோட்டூர் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் ஊழலை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் செய்தனர்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி பருவ காலத்தில் நெல் சாகுபடி லட்சக்கணக்கான பரப்பளவில் மேற்கொள்வது வழக்கம். இவ்வாண்டு தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்காத நிலை, புயல், மழை, வெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகள் என பல்வேறு நிலைகளில் விவசாயிகள் கஷ்டப்பட்டு நெல்லை விளைவித்து தற்போது அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்காக செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழலை கண்டித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள 83 குலமாணிக்கம் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் கொள்முதல் அதிகாரிகள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.35 முதல் ரூ 45 வரை லஞ்சம் பெறுவதாக தெரிகிறது. இதை கண்டித்தும், நெல் மூட்டை ஒன்றுக்கு 3 கிலோ நெல்லை கூடுதலாக எடைவைத்து திருடும் சுமை தூக்கும் தொழிலாளர்களை கண்டித்தும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஊழல் முறைகேடு குறித்து கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உரிய விசாணை மேற்கொள்ள வேண்டும். இதுவரை கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து திருடப்பட்ட மொத்த நெல் எடை குறித்தும், விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளுக்கு பெட்ரா பணம் குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!