நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் செய்ய முயற்சி
நீடாமங்கலம் ரயில் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் தொடர்ந்து 300 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ,விவசாயிகளுக்கு எதிராக மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தை உடனே திரும்பெற வலியுறுத்தி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன் போில் , திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தை கட்சிகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 250க்கும் மேற்பட்டோர் எர்ணாகுளம் அதிவிரைவு ரயிலை மறிக்க முயற்சித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அவர்கள் ரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது பேசிய விவசாய அமைப்பினர் மக்கள் விரோதபோக்கை கையாலும் பிரதமர் மோடி உடனே விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள மூன்றுவேளாண் சட்டத்தையும் திரும்ப பெறவில்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக மத்திய அரசை எச்சாித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu