கூத்தாநல்லூர் கூட்டுறவு வங்கி கிளையில் பல லட்சம் மோசடி நடந்ததாக புகார்
கூத்தாநல்லூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளை
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் திருவாரூர் மாவட்ட கிளை கூத்தாநல்லூரில் உள்ளது. நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மன்னார்குடி வட்டம், குன்னியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் விக்ரபாண்டியம் கூட்டுறவு சங்க செயலாளர் ஜானகிராமன் தனது கிளையில் டெபாசிட் செய்யாமல் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கூத்தாநல்லூர் கிளையில் அதிக வட்டி வாங்கி தருவதாக கூறி தனது ஓய்வூதிய பணத்தில் சேமிப்பு கணக்கினை 01.07.2016-ல் தொடங்கி அதில் ரூ 15 லட்சம் பிக்சட் டெபாசிட் செய்து வைத்துள்ளார்.
அவரது வங்கி கணக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு அவரது கையொப்பம் இன்றி சுமார் ரூ.15 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது .
இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் செல்வகுமாரை கண்ணன் அணுகி விவரம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். தனது பணம் தவறாக பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்த கண்ணன், இதுகுறித்து தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் மற்றும் கூட்டுறவு வங்கி பதிவாளர் ஆகியோருக்கு பல முறை பதிவு அஞ்சல் மூலம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
உடனடியாக திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு காவல் அலுவலகத்தில் புகாரினை அளித்ததின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி காவல்துணை கண்காணிப்பாளர் இந்த வழக்கை கோட்டூர் காவல்நிலையத்தில் தொடர்ந்து விசாரணை செய்து முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu