மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன்

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னை போலீஸ்  அணி சாம்பியன்
X
திருவாரூரில் மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்பட்டது.
வடுவூர் அருகே மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில் சென்னையை சேர்ந்த சிட்டி போலீஸ் அணியினர் முதல்பரிசை வென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கட்டக்குடி கிராமத்தில் கட்டக்குடி விளையாட்டுகழகம் சார்பாக மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடத்தப்பட்டது . இதில் திருச்சி , கோயமுத்தூர் , மதுரை , ராமநாதபுரம் , கண்யாகுமரி , திண்டுக்கல் , கட்டக்குடி ,உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 28 அணியினர் களம் இறங்கினர் .

இரண்டுநாள் ஆட்டத்தின் இறுதியில் சென்னை சிட்டி போலீஸ் அணியினர் முதல் பரிசு 50 ஆயிரத்திற்கான காசோலையையும் கோப்பையையும் , ஒட்டஞ்சத்திரம் வெண்ணிலா கபடி. அணியினர் இரண்டாம் பரிசு 40 ஆயிரத்திற்கான காசோலையும் கோப்பையையும் வென்றனர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!