மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி

மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி
X

மாவட்ட ஊராட்சி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்.வீரமணி, வாக்காளர்களை சந்தித்தார்.

மன்னார்குடியில், மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி, வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், மாவட்ட ஊராட்சி வேட்பாளராக, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்.வீரமணி களமிறங்கி உள்ளார். அவருக்கு, வாக்கு கேட்டு ராமபுரம், சவளக்காரன், வடகோவனூர், தென்கோவனூர், மஞ்சனாவடி திருராமேஷ்வரம், ஓவர்ச்சேரி, கொத்தங்குடி, பழையனூர், வடபாதிமங்களம், சித்தனக்குடி, வேளுக்குடி ஆகிய ஊராட்சிகளில் வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ், மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, ஒன்றிய பெருந்தலைவர்கள் அ.பாஸ்கர், மணிமேகலை முருகேசன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாலா பாண்டியன், கே.தவபாண்டியன், வி.கலைச்செல்வன், துரை அருள்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture