மே 26 கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பங்கேற்போம், பிஆர்.பாண்டியன்
கிசான் மோர்ச்சா அமைப்பு மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்,6 மாதம் தொடரும் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு மே 26ல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஆதரவு கேட்டு உள்ளது.இதனை ஏற்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தமிழகத்தில் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவளித்து பங்கேற்கிறது.
ஊரடங்கு அமலில் இருப்பதை கருத்தில்கொண்டு விவசாயிகள் தங்கள் வீடுகளின் முன் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுகிறேன்.
முழு ஊரடங்கில் உரக்கடைகள் திறப்பதால் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கிடையாது. தற்போது வேளாண் இடுபொருட்களை எடுத்துச் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ள நிலையில் கடைகள் திறக்கப்படாமல் எந்த பயனும் இருக்காது.
இதனால் வேளாண் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த அளவிற்கு நோய் கட்டுபடுத்துவது அவசியமோ ? அந்த அளவு ற்கு உணவு உற்ப்பத்தியும் அவசியம் என்பதை உணர வேண்டும்.
குறுவை, பருத்தி உள்ளிட்ட கோடை சாகுபடி பயிர்கள் மேற்கொள்வதற்கு விதைகள்,உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறித்த காலத்தில் வேளாண் பணிகளை மேற்கொள்வதில் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டல் உற்பத்தி, மகசூல் பாதிப்பு ஏற்ப்படும். இதனை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் உரக்கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டுகிறேன் என்றார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu