கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு தடை: கூத்தாநல்லூரில் தஹ்வீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு தடை:   கூத்தாநல்லூரில்  தஹ்வீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
X

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 1000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆண்கள் மற்றும்பெண்கள் 

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

இஸ்லாமிய பெண்கள் அவர்களது மத வழக்கப்படி ஹிஜாப் அணிவது தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆனால் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் ஹஜாப் எனும் பர்தா அணிவதை தடைவிதித்துள்ளது. கர்நாடக பாஜக அரசு மத சம்பிரதாயங்களில் தலையிடுவதை இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றனர். தமிழகத்திலும் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிவதற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 1000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெண்கள் , ஆண்கள் உட்பட அதன் பொதுச்செயலாளர் அப்துல்கரீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது . மத பழக்கவழக்கங்களில் அரசியலமைப்பு கொடுத்துள்ள உரிமையை பறிக்கும் வகையில் மாணவிகள் பர்தா அணிவதை தடைசெய்துள்ள கர்நாடக பாஜக அரசை கண்டித்தும், ஹிஜாப் எனும் பர்தா அணிவதற்கான தடையை உடனடியாக ரத்து செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!