மன்னார்குடியில் அ.தி.மு.க. தொழிற்சங்க தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

மன்னார்குடியில் அ.தி.மு.க.  தொழிற்சங்க தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
X

அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடந்தது.

மன்னார்குடியில் அ.தி.மு.க. தொழிற்சங்க தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடந்தது.

திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் அமைச்சரும் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ஆர் .காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் கலந்துகொண்டுபேசினார். அதனைத் தொடர்ந்து தேர்தல்வேட்புமனு படிவங்களையும் அவர் வழங்கினார்.

அப்போது பேசிய கமலக்கண்ணன் அண்ணா தொழிற்சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு தொழிலாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுவதாக கூறினார். மேலும் வேட்புமனுத்தாக்கலுக்காக பெறப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 11 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு தொழிலாளர்களும் எதிர்காலம் நமக்கு இருக்கிறது என்று நமது சங்கத்தின் மீது ஆணித்தரமான நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் இன்று நம்மை ஆளும் கட்சியினர் பழிவாங்குகிறார்கள் என முடங்கிவிடக்கூடாது. நாளை நாம் மீண்டும் ஆளும் கட்சியாக மாறுவோம் .ஆனால் யாரையும் முடக்கும் பழக்கம் அ.தி.மு.க.விற்கு கிடையாது . ஜாதி ,மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி பெரியவர் ,சிறியவர்கள் என்கிற பாகுபாடு அற்றது அ.தி.மு.க.என்றார் .

கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலாஜி ,அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் ,அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா ராஜாமாணிக்கம் , ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story