'அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை'- சீமான் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை- சீமான் குற்றச்சாட்டு
X

மன்னார்குடியில் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

‘அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக வேலை செய்யவில்லை’ என்று சீமான் குற்றம் சாட்டி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சோழமண்டல கலந்தாய்வு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-

தமிழ்நாட்டில் எதிர்கட்சியாக அ.தி.மு.க.இருக்கிறதா? அ.தி.மு.க. எதிர்கட்சியாக வேலையை செய்யவில்லை. எதிர்கட்சி இயங்கவில்லை, நாங்கள் தான் எதிர்கட்சியாக இருந்து அரசை கேள்வி கேட்டு வருகிறோம். எ ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.விடுத்த ஒரு அறிக்கையோ, ஒரு விவாதமோ எதிர்வாதமோ நான் பார்க்கவில்லை. நான் எங்குசென்றாலும் ஊடகங்களை சந்திக்கிறேன். அவர்கள் ஊடகங்களை கூட சந்திப்பத்தில்லை.

உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு முதலமைச்சர்செய்யும் காரியத்தை விட கூடுதலாக அதையும் தாண்டி செய்கிறார் என கூறியுள்ளதை பற்றி கேள்வி எழுந்தபோது அது தவறு, நீதிபதி நீதியரசராக தான் இருக்கவேண்டும், ஒரு கட்சியின் மாவட்டசெயலாளர் போல் பேச கூடாது. இப்படி பேசினால் உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன நீதிகிடைக்கும். இதுபோல் செய்வதால் அனைவரும் கூச்சமடைகிறார்கள். வழக்கின் தன்மையைபார்த்து அதற்கு தீர்ப்பு சொல்லி நீதிவழங்கவேண்டும், அறிவுறுத்தல் என்பது வேறு,ஆனால் அதை விட்டு விட்டு தகுதியை மீறிசெயல்படுகிறார், தாண்டி வேலை செய்கிறார் என்பது உங்கள் வேலை இல்லை. கட்சிகாரர் பேசாததை நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் நீதிபதிக்கு அது அழகல்ல.

சசிகலா இல்லாமல் அ.தி.மு.க.வை இந்தஅளவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது.ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியை காப்பாற்றிபதவியை தக்க வைக்க அந்த சசிகலா இல்லை என்றால் முடிந்திருக்காது, இது எடப்பாடி பழனிச்சாமிக்கே நன்றாக தெரியும். நான் ஒரு கட்சி நடத்திக்கொண்டு இன்னொரு கட்சி உள்விவகாரங்கள் பற்றி கருத்து கூறுவது நாகரீகமாக இருக்காது.

பெட்ரோல் டீசல் விலைஉயர்வினால்அத்தியவாதிய பொருடகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.பெட்ரோல் டீசல் விலை உயர்வு காய்கறிஉள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வுக்கு காரணமாக இருக்கிறது. தக்காளிவிலை ரூ. 10, பெட்ரோல் டீசல் விலை,சுங்கசாவடி, வண்டி வாடகை எல்லாம் சேர்ந்ததாக்காளி விலையில் ஏறிவிடுகிறது.விவசாயத்தை கைவிட்டால் மண் அள்ளி தின்றுவிட்டு சாவதை தவிற வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்