மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வழிபாடு

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வழிபாடு
X

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆசி பெற்றனர்

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கும்பகோணத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தார். அவரை கோயில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து யானை செங்கமலத் திடம் ஓ.பன்னீர் செல்வம் ஆசி பெற்றதை தொடர்ந்து தாயார் செங்கமலம் , ராஜகோபால சுவாமி சந்நதிக்கு சென்று தரிசனம் செய்தார் . இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆசி பெற்றனர்.

இதில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் , கழக அமைப்பு செயலாளர் சிவராஜ மாணிக்கம் , ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட , ஒன்றிய , நகர , நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!