மன்னார்குடியில் ஆதிதிராவிடர் சமூக நல சங்க பொதுக்குழு கூட்டம்

மன்னார்குடியில் ஆதிதிராவிடர் சமூக நல சங்க பொதுக்குழு கூட்டம்
X

மன்னார்குடியில் ஆதிதிராவிடர் சமூக நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மன்னார்குடி ஆதிதிராவிடர் சமூக நல சங்க பொதுக்குழு கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அம்பேத்கர் அறிவாலயத்தில் ஆதிதிராவிடர் சமூக நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட, ஓன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் .

கூட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் கணினி பயிற்சி பெறுவதற்கு அம்பேத்கர் அறிவாலய அரங்கில் கணினி வகுப்பு தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், மாணவ மாணவிகள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு அரசே பயிற்சி வகுப்புகள் தொடங்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் தமிழ் தெரிந்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அரசாணை வெயிட்ட தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
ai marketing future