/* */

திருவாரூரில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் ஆறுகள் தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
X

திருவாரூர் மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே , ஓகைபேரையூர் மற்றும் கர்ணாவூர் கிராமம், பனையனார் வடிகால் வாய்க்கால், அனுமன்கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை , கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூடுதல் தலைமை செயலாளர் கூறும்போது

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்தாண்டு காவிரி டெல்டா பகுதியின் 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்தி சுமார் 150 பொக்லின் இயந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் எதிர்வரும் மே-31ம்தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை துர்வாரும் பணிகளை அந்தந்த பகுதியிலுள்ள உழவர் குழுக்களின் கண்காணிப்பு, முழு ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரானது அனைத்து கடைமடை பகுதிகளுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 115 பணிகள் எடுக்கப்பட்டு 1200.56 கி.மீ தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் இட ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்

Updated On: 27 April 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  3. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  4. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  5. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  6. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  7. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  8. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  9. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  10. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...