பனைவிதை, மரக்கன்று நட்டு அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
நீடாமங்கலம் கிரீன் நீடா குறுங்காட்டில் மரக்கன்றுகள் நட்டு அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகேயுள்ளது கிரீன் நீடா குறுங்காடு. இங்கு கிரீன் நீடா அமைப்பு, மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசுக்கலைக்கல்லூரி, பூண்டி ஏ.வி.வி.எம். ஸ்ரீ புட்பம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து மறைந்த குடியரசுத்தலைவர் ஏபிஜே.அப்துல்கலாமின் 90வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
90 பனை விதைகளை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் நட்டார். அவர் பேசுகையில், மறைந்த குடியரசுத்தலைவர் கலாம் கண்ட கனவை நினைவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும், தூங்கும் போது காண்பது கனவல்ல, நம் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும். கலாம் ஆசைப்பட்டது போன்று நம் நாடு சுற்றுச்சூழலில் மேம்பாடு அடைய வேண்டும். அவரின் முதன்மையான கனவான இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை நினைவாக்கிட அவர் பெரிதும் நம்பியது மாணவர்களைதான். மாணவர்கள் அவரின் கனவை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
90 மரக்கன்றுகளை கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு நட்டினார். மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசுகலைக்கல்லூரி, பூண்டி ஏ.வி.வி.எம். ஸ்ரீ புட்பம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிக்குழந்தைகளும் பனை விதைகளை விதைத்து, மரக்கன்றுகளை நட்டு பிறந்தநாளை கொண்டாடினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu