பேங்க் வாசலில் ஆசிரியரிடம் 5லட்சம் கொள்ளை.!

பேங்க் வாசலில் ஆசிரியரிடம் 5லட்சம் கொள்ளை.!
X
மன்னார்குடியில் அரசு பள்ளி ஆசிரியரிடம் நூதன முறையில் 5 லட்சத்தை 4பேர் கொண்ட மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவர் அதே ஊரில் அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் தனியார் வங்கியில் இருந்து ரூ 5லட்சம் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து தனது இரு சக்கரவாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த மர்ம நபர்கள் ரூ 50 பணத்தை கீழே போட்டுவிட்டு உங்க பணம் கீழகிடப்பதாக கூறியுள்ளனர். ஆசிரியர் கண்ணன் கீழே குனிந்து பார்த்த போது அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றுள்ளனர். அவர்களை கொஞ்ச தூரம் விரட்டி சென்ற ஆசிரியர் கண்ணன் பிடிக்க முடியாமல் பரிதவித்து, மன்னார்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

குறிப்பாக மன்னார்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் வங்கியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்பது வாடிக்கையாளர்கள் இடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வங்கியின் வாசலிலேயே நூதன திருட்டு சம்பவம் நடைபெற்றது, மன்னார்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!