3 மயில்களை வேட்டையாடி கொன்ற இருவர் கைது

3 மயில்களை வேட்டையாடி கொன்ற இருவர் கைது
X
மன்னார்குடி அருகே 3மயில்களை வேட்டையாடி சுட்டு கொன்ற இருவர் கைது சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அதிகாலை சோழபாண்டி கிராமத்தில் தலையாமங்கலம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, சந்தேகம் ஏற்படும் வகையில் இரண்டு நபர்கள் துப்பாக்கியுடன் சென்றனர். காவல்துறையினறை பார்த்த பின்பு இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றார்கள். இருவரையும் மடக்கி பிடித்ததில் மயில்களை வேட்டையாடிது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த சாக்கு பையினை சோதனை செய்தபோது தேசிய பறவையான 3 மயில்களை சுட்டு கொன்றது தெரிய வந்ததது. அதனை தொடர்ந்து திருமக்கோட்டை திருமேனியை சேர்ந்த இளங்குமரன் (35 ) முருகேசன் (19) இருவரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து இறந்துபோன 3 மயில்கள், 1 துப்பாக்கி, வேட்டைக்கு பயன் படுத்திய இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்வைகளை பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய பறவையான 3 மயில்களை வேட்டையாடி சுட்டுகொன்ற சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!