மன்னார்குடியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி

மன்னார்குடியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு  நினைவு தின நிகழ்ச்சி
X

மன்னார்குடியில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மறைந்த பேராசிரியர் அன்பழகன் நினைவு தினத்தையொட்டி மன்னார்குடியில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தி.மு.க. மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. அன்பழகன் திருவுருவ படத்திற்கு தி.மு..க பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு மாலை அணிவித்து மரியாதை செய்தார் .

இதில் நகர செயலாளர் வீரா கணேசன் , நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ மாணிக்கம் , தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட அரசு வழக்கறிஞர் கலைவாணன் , உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .

Tags

Next Story
திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: நாமக்கலில் சிறப்பு கருத்தரங்கம்