திருவாரூர் மாவட்டத்தில் 12,500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் 12,500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின
X

திருவாரூர் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை விவசாயிகள் வேதனையுடன் வெளியே எடுத்து  காட்டினர்.

திருவாரூர மாவட்டத்தில் கனமழையால் சுமார் 12500 ஏக்கர் சம்பா இளம் நடவு பயிர்கள் நீரில் முழ்கி பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒளிமதி , கப்பலுடையான் , வையகளத்தூர் , உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பு சம்பா சாகுபடியில் சுமார் 5000 ஹெக்டருக்கு மேல் இளம் நடவு பயிர்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இம்மழை தொடர்ந்தால் மேலும் பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்படுவதோடு, பயிர்கள் அழுகி விடும் என்பதால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.எனவே மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

பயிர் காப்பீடு திட்டத்திலும் பயிர்காப்பீடு நிறுவனம் மற்றும் அரசு அதிகாரிகளின் குளறுபடிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகாலமாக இந்த கிராமங்களில் விவசாயிகள் 100 சதவீதம் பயிர்காப்பீடு செய்தபோதிலும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கப்பெறாமல் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!