சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள்  போராட்டம்
X

மன்னார்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவகுளம் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா , தாளடி சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகளை சாலைகள் மற்றும் வயல்களில் கொட்டி வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் கருவகுளத்தில் புதிய நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கொடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென கருவகுளத்தில் விவசாயிகள் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து நெல்லை கொட்டி தமிழக அரசு மற்றும் முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மண்டல மேலாளர் மற்றும் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் மன்னார்குடியிலிருந்து திருச்சி, வேதாரண்யம் செல்லும் சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!