சொத்து பிரச்சனை- வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு

சொத்து பிரச்சனை- வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு
X

மன்னார்குடியில் சொத்து பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய 15 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள உண்ணாமலை நகரில் கைலாசம் (45) என்பவர் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது சித்தப்பா தர்மராஜ் என்பவரிடம் 15 ஆண்டு காலமாக வேலை பார்த்து வந்ததால் அவருக்கு சொந்தமான இடத்தை 2 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு கைலாசத்திடம் இடத்தை கொடுத்து விட்டார். இந்நிலையில் இடத்தின் மதிப்பு அதிகமானதால் கைலாசத்தை வீட்டை காலி செய்து வெளியேறுமாறு கூறி பல முறை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் தர்மராஜ் தூண்டுதலின் பேரில் கைலாசம் வீட்டிற்கு சென்ற அண்ணாதுரை , தனபால் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பல் கைலாசத்தின் மனைவி மற்றும் மகனை வீட்டை விட்டு வெளியே தள்ளி வீட்டின் மேற்கூரையை சூறையாடி வீட்டில் உள்ள பொருட்களை அள்ளி தெருவில் வீசி விட்டு டிவி, மற்றும் சுமார் 8 பவுன் நகையை எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணாதுரை மற்றும் தனபால் உள்ளிட்ட பெயர் தெரியாத 10 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி