ஜெ. மரணத்திற்கு நான் காரணமா ? வழக்கு போடுங்கள் ! மு.க.ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரானதிருவாரூரிலிருந்து தொடங்கினார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் டிஆர்பி ராஜா, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜோதி ராமன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேதரத்தினம் உள்ளிட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தில் செய்தார். அப்போது அவர் பேசியதாவது
திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் தொடங்கியுள்ளேன். கலைஞர் பிறந்த, கலைஞரை வளர்த்த இந்த திருவாரூர் மண்ணில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன். இந்த சுற்றுப்பயணத்தில் நான் உணரக்கூடிய உணர்வு 234 இடங்களுக்கு 234 இடங்களையும் திமுக கைப்பற்றும். அதிமுக கூட்டணி வாஷ் அவுட் ஆகும்.
கடந்த பத்தாண்டு காலமாக நாட்டையே குட்டிச்சுவராக்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டையே பாலாக்கி வைத்திருக்கிறார்கள். முதல்வர் பழனிசாமி வாய்க்கு வந்தபடி சொல்லும் அத்தனையும் பொய்யாகவே உள்ளது.
ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞர், மு க ஸ்டாலின் தான் என முதல்வர் கூறியிருக்கிறார். ஸ்டாலின் தான் காரணம் என்றால் இந்த நான்காண்டு காலம் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீந்தீர்கள்.? தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்.. நீங்கள் தயாரா.? நான் ரெடி. எடப்பாடி பழனிசாமி நீங்கள் ரெடியா.? என்று சவால் விடுத்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான்கு வருடங்களாக விசாரணை கமிஷன் நடந்துவரும் நிலையில் இதுவரை உண்மை வெளிவரவில்லை.
ஏழெட்டு முறை துணை முதல்வர் ஓபிஎஸ் க்கு விசாரணை கமிஷனுக்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பியும் இதுவரை அவர் செல்லவில்லை. ஜெயலலிதாவிற்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இறந்து போனது ஒரு முதலமைச்சர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மரணத்தை கண்டு பிடிப்போம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu