திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 24 பேர் மனு தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 24 பேர் மனு தாக்கல்
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் இது வரை 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சி, 7 பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 216 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

நேற்று மன்னார்குடி நகராட்சியில் ஒருவரும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 6 பேரும், மற்றும் நன்னிலம், முத்துப்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவர் என 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதுவரை திருவாரூர் மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி அளவில் 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!