திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!

திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
X

தமிழ் நாடு மக்களவை தேர்தலில் நான்கு முனை போட்டி 

இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகள் மற்றும் கடைசி கட்ட நிலவரங்களில் அடிப்படையில், தமிழகத்தில் பல தொகுதிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மாலையுடன் தேத்தல் பிரச்சாரம் முடிந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. 1தமிழகத்தில் இருந்து 39 எம்-பி-க்களை தேர்வு செய்வதற்காக, சுமார் 6 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய இருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் முதல் கடைமட்டத் தொண்டன் வரை பம்பரம் போல் சுற்றி வாக்குச் சேகரித்துள்ளனர். அதுமட்டுமல்ல, திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, தனியாக நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுவதால், பரப்புரையில் அனல் பறந்தது

பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், உள்ளூர் தகவல்கள், உளவுத்துறையின் தகவல்கள், பிரத்யேக களத் தகவல்கள் என அனைத்தும் கிட்டத்தட்ட அந்தந்த தொகுதிகளில் இன்றைய நிலவரத்தை எடுத்துச் சொல்லும் வகையில் உள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் உள்ள 40 தொகுதிகளில், பல கருத்துக் கணிப்புகள் கணித்தப்படி, திமுக தலைமையிலான கூட்டணி, பல இடங்களில் முன்னிலையில் வெற்றி வாய்ப்பை பெறும் வகையில் உள்ளது. அந்த வகையில், அக்கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.

தூத்துக்குடியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த முறை கனிமொழி வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதை தொகுதியின் இன்றைய நிலை காட்டுகிறது. அது மட்டுமின்றி,

  • ஸ்ரீபெரும்புதூர்,
  • வட சென்னை,
  • மத்திய சென்னை,
  • திருவள்ளூர்,
  • அரக்கோணம்,
  • விழுப்புரம்,
  • சிதம்பரம்,
  • திருவண்ணாமலை,
  • ஆரணி,
  • கிருஷ்ணகிரி,
  • சேலம்,
  • நாமக்கல்,
  • திருப்பூர்,
  • கரூர்,
  • தென்காசி,
  • விருதுநகர்,
  • மதுரை,
  • திண்டுக்கல்
  • நீலகிரி,
  • தஞ்சாவூர்,
  • நாகப்பட்டினம்,
  • மயிலாடுதுறை,
  • பெரம்பலூர்,
  • கடலூர்,
  • சிவகங்கை,
  • கன்னியாகுமரி
  • காஞ்சிபுரம்

உள்ளிட்ட 28 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள், 4 முதல் 15 சதவீத வித்தியாசத்தில் வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாக கடைசிக் கட்ட கள நிலவர கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இழுபறியில் உள்ள தொகுதிகள்:

கட்சிகளின் தொடர் பிரசாரம் மற்றும் பல்வேறு காரணிகளில் காரணமாக, தற்போதைய நிலவரப்படி, சில தொகுதிகளில் நிலை மாறி, தற்போது இழுபறி நிலையில் உள்ளது.

பின்வரும் 9 தொகுதிகளில் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம் 2 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என கடைசி கட்ட கள நிலவர கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 1. கள்ளக்குறிச்சி, 2. பொள்ளாச்சி, 3. ராமநாதபுரம், 4. தர்மபுரி, 5. ஈரோடு, 6. திருச்சி, 7. தேனி, 8. கோவை, 9. தென்சென்னை ஆகிய தொகுதிகளில் இழுபறி நிலையில் உள்ளது. கடைசி கட்ட மக்களின் மனநிலைக்கு ஏற்ப, இத் தொகுதியில் முடிவுகள் மாறலாம் .

கடுமையான போட்டி உள்ள தொகுதிகள்:

இந்தத் தொகுதியில், கடந்த சில தினங்களாக, பரப்புரைகள் மட்டுமல்ல, மக்களின் மனநிலையிலும் பெரும் மாற்றங்கள், திடீரென வந்துச் செல்வதால், கள நிலவரத்தை கணிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.

1. வேலூர், 2. திருநெல்வேலி, 3. புதுச்சேரி ஆகிய இந்த 3 தொகுதிகளில், முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது ஒரு சதவீதத்திற்குள் இருக்கும் என கணிக்க முடிகிறது.

அந்த அளவுக்கு கடும் போட்டி நிலவும் . இதில் புதுச்சேரியில் காங்கிரஸுக்கு சாதகமான நிலை இருந்து, தற்போது, இன்றைய தேதியில் அது கடும் இழுபறி தொகுதிக்குள் வந்துள்ளது எனலாம்.

பல தொகுதிகளில், அதிமுக, பாஜக இடையே யாரை, யார் வீழ்த்துவது என்பதில் கடும் போட்டி நிலவுவதால், திமுக அணிக்கு பல தொகுதிகளில் பெரும் சாதகமாக காணப்படுகிறது. இதனால், அக் கூட்டணியினருக்கு வெற்றி உறுதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், கோவையில் தொகுதியில், பாஜக, அதிமுக இடையே கடும் மோதல் நிலவுகிறது. தமிழகத்தில் மாநில அரசுக்கு எதிரான வாக்குகளை இரு கட்சிகளும் பிரித்துக் கொள்வதால், அது திமுக அணிக்கு சாதகமாகிறது.

அதேபோல், ராமநாதபுரத்தில், பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிடும் ஓபிஎஸ் வெற்றிப் பெறக் கூடாது என்பதற்காக, அதிமுக பெரும் பணியாற்றுகிறது. இது எடப்பாடியாருக்கு அந்தஸ்து பிரச்சினை என்பதால், அதிமுக-வினர் பம்பரம் போல் செயல்படுகின்றனர். இது, திமுக அணிக்கு பெரும் சாதகமாக இருக்கிறது.

இதே நிலைதான், தேனியில் டிடிவி தினகரனுக்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக, டிடிவி பிரச்சினையால், திமுக-விற்கு சாதகமான போக்குக் காணப்படுகிறது.

அதேபோல், கடும் இழுபறி என்பதன் கீழ், வேலூர், திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகள் வருகின்றன. கடந்த வாரம் வரை, புதுச்சேரியில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெறும் என்ற நிலைதான் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் இருந்தது. ஆனால், தற்போதைய நிலைப்படி, பாஜக முந்த ஆரம்பித்துள்ளது. வித்தியாசம் ஒரு சதவீதமாகத்தான் இருக்கிறது. இதேபோல், வேலூர், திருநெல்வேலியில் நீயா, நானா என 10 மீட்டர் ஓட்டப்பந்தயம் போல், நொடிக்கு நொடி திருப்பமாக இருக்கிறது. எனவே, இந்த மூன்று தொகுதிகள் மிகுந்த கவனம் பெறப்போவது உறுதி.

கடைசி கட்ட கள நிலவரப்படி, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணிக்கு சாதகமாக காணப்பட்டாலும், சில தொகுதிகளில் இழுபறி நிலை காணப்படுவதால், வரும் ஜூன் 4-ம் தேதி, சில திடுக் திருப்பங்களுக்கு தயாராக இருக்கலாம்.

இது கடைசிக் கட்ட கள நிலவரம் கணிப்புகள் மட்டுமே. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதும், வாக்குப்பதிவின் போது எப்படி வாக்களிக்கப்போகிறார்கள் என்பதும் யாருமே உறுதியாக கணிக்க முடியாது. நாம் மேற்கண்டது போலவே வரலாம் அல்லது சில மாற்றங்கள் வரலாம் அல்லது அனைத்துமே மாறலாம்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself