சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேனி இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X
தேனி மாவட்டம், போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சிறுமி -க்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போடி அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர், ஜே.கே.பட்டி, கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் போடி - திருமலாபுரத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், அவ்வப்போது தனது பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆதித்யா (19) என்ற இளைஞர் திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பூட்டிய வீட்டுக்குள் இருவரும் தனிமையில்அடிக்கடி இருந்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதனடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture