கர்நாடகா தமிழர்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்
பைல் படம்
கர்நாடகா தமிழர்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு தமிழர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய முக்கியமான சில விஷயங்களை பார்க்கலாம்.
இரண்டே நாட்கள் மட்டும் முதல்வராக பதவி் வகித்து, 102 ஆண்டுகால பிரச்சினைக்கு முடிவு கட்டியதற்காக, நூறாண்டு காலமாக 'காவிரி நீர் பங்கீடு பிரச்சனையை' பயன்படுத்தி தமிழகம் மற்றும் கர்நாடகா மக்களை எதிரிகளாகவே நிலை நிறுத்தி நடந்த கபட அரசியலுக்கு முடிவு கட்டியதற்காக, பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு சரியான உதாரணம், இந்த சம்பவம்.
2018 ல் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைப்பது குறித்த சிக்கலான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது.அதேநேரத்தில் கர்நாடக தேர்தலில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழலிலும், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் ஆட்சியமைக்க கோரி எடியூரப்பாவை பதவியேற்க செய்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத இரண்டும் கூட்டணி அமைத்து நீதிமன்றத்தை நாட, இரண்டே நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் மஜத இரண்டும் பதவி பங்கீடு பற்றி பரபரப்பாக பேரம் நடத்தி கொண்டு இருக்கும் போதே, அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற போதிலும் கூட சத்தமே இல்லாமல் 57 மணி நேர முதல்வர் எடியூரப்பாவை வைத்து 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் வழங்கும் தீர்மானத்தில் கையெழுத்து இட வைத்தார். சப்தம் இல்லாமல் நடந்தது இச்சம்பவம். ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்றால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மவுனம் காக்க வேண்டும்.
காங்கிரசும், மஜதவும் கூட்டணி ஆட்சி அமைக்கும் பதற்றத்தில் இருந்ததை பயன்படுத்தி அவர்கள் கவனத்தை சிதற வைத்து உச்சநீதிமன்றத்தில் வலுவான 'காவிரி மேலாண்மை ஆணையம்' அமைவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் கனகச்சிதமாக முடித்து விட்டார் மோடி. அதேபோல் எதிர்காலத்தில் வரும் அரசுகள் காவிரி நீர் தமிழகத்திற்கு தரப்படுவதை தடுத்து விடக்கூடாது என்பதற்காக 'காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு' அதிகபட்ச அதிகாரம் அளிக்கும் படி உச்சநீதிமன்ற தீர்ப்பினையும் பெறுவதற்கு முயற்சியிலும் வெற்றி பெற்றார். அதோடு நில்லாமல் மத்திய அரசு மூலமாக பிறப்பித்த உத்தரவை எடியூரப்பாவை கர்நாடக அரசு கெஜட்டிலும் உடனடியாக வரவைத்தார் பிரதமர் மோடி.என்ன ஒரு விவேகமான செயல் பாருங்கள்.
இரு மாநில மக்களின் நலனிற்காக எவ்வளவு தொலைநோக்கு பார்வை கொண்டு சிந்தித்திருந்தால், ஆட்சி பறிபோவதைப் பற்றி கவலைப்படாமல், நூறாண்டு கால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை பற்றி சிந்தித்து இருப்பார்? அதன் பிறகு 'தண்ணீரை திறந்து விடுங்கள்' என்று தமிழக அரசு கோரிக்கை வைக்காமலே, ஒவ்வொரு வருடத்திற்கும் எவ்வளவு டிஎம்சி நீர் தரப்பட வேண்டுமோ, அந்த தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதை எந்த கட்சியாலும் தடுக்க முடியாத படி, உச்ச நீதிமன்றம் மூலமாகவும், 57 மணி நேர பாஜக ஆட்சியின் மூலமாகவும் சாதித்தார் மோடி. அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகவே பதவியை ராஜினாமா செய்து கண்ணீருடன் வெளியேறினார் எடியூரப்பா. காங்கிரஸ், மஜத கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி மீண்டும் எடியூரப்பாவை பதவியில் அமர்த்தினார் மோடி என்பது வேறு விஷயம். நூறாண்டு காலகாவிரி பிரச்சினையை சில நாட்களிலேயே தீர்த்து வைத்து இரு மாநில மக்களும் தண்ணீருக்காக அடித்து கொள்வதில்..இருந்து விடுதலை தந்ததற்காகவே கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தார்மீக ரீதியாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு முறை காவிரி நீர் பிரச்னை அரசியல் ஆக்கப்படும் போதும், உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடமாடியது கர்நாடக தமிழர்களே. இப்போது அது போன்ற சூழலே ஏற்படாத வகையில் உண்மையான விடியலை தந்தது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தான். 57 மணி நேர முதல்வர், நூறாண்டு கால பிரச்னை மக்கள் நலனில் அக்கறை மௌனமா(க்)க ஒரு கையெழுத்து. இப்போது தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் தடையின்றி கிடைக்கிறது. தென் மாவட்டங்கள் வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதைவிட முக்கியமான விஷயம்,
'இரு மாநில மக்களிடையே அமைதி'. வேறெதற்காக காத்திருக்க வேண்டும்? கர்நாடக தமிழர்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டு தமிழர்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு பாஜகவை ஆதரிக்க வேண்டும். இது நன்றி கடன் அல்ல, நமது கடமை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu