பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
டிடிவி தினகரன்
தமிழக மக்களவை தேர்தல் வேட்பு மனு நேற்று பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவு பெற்றது. இதில் தேனி மக்களவை தொகுதியில் பிரதான கட்சிகள் சுயேச்சை என 43 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை நடைபெற்றது. இதில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதில் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தில் இந்தியக் குடியுரிமை, பெரா வழக்கு அபராதம் மற்றும் விவசாய நிலங்களின் விபரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை என திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக வேட்பு மனு மீதான பரிசீலனை மீண்டும் மதியம் 3 மணிக்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்தார்.
இதில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. இதில் டிடிவி தினகரனின் பிரமாண பத்திரத்தில் இந்தியக் குடியுரிமை, பெரா வழக்கு அபராதம் மற்றும் விவசாய நிலங்களின் விபரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை என திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு காரணமாக வேட்பு மனு மீதான பரிசீலனை மீண்டும் மதியம் 3 மணிக்கு நடைபெறும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்த நிலையில் மீண்டும் மதியம் 3 பின் வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளரின் பிரதிநிதிகள் வைத்த குற்றச்சாட்டுகள் முறையான ஆவணங்கள் இல்லாத என்று நிராகரிக்கப்பட்டு அதன் பின் சுமார் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu