தேனி-கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.

தேனி-கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஆய்வு

தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மணியக்காரன் பட்டியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல், குளோரின் பவுடர் இடுதல், பொது பாதைகளை அடைத்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story