/* */

தேனி-வாகன சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.

பெரியகுளம் அருகே சுமார் ஒரு லட்சத்து 12 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்

HIGHLIGHTS

தேனி-வாகன சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார்.
X

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காட்ரோடு சோதனைச்சாவடியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையின் போது சுமார் ஒரு லட்சத்து 12 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேனி - திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான காட்ரோட்டில், தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து TN20 DB 9884 என்ற வாகனம், பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டிக்கு சென்றதாக கூறப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர், அதில் தடை செய்யப்பட்ட சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த கார் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதில் காரில் பயணம் செய்த தினேஷ், பாண்டித்துரை ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Updated On: 30 May 2021 3:46 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  9. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!