தேனி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு, அமைச்சர்கள் பங்கேற்பு
அமைச்சர் ஐ பெரியசாமி, அமைச்சர் பி மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் இருபோக விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் முதல் போக பாசனத்திற்கு 45041 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணி மேற்கொள்வதற்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அடுத்த 75 நாட்களுக்கு சுழற்சி முறையிலும், ஆக மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரால் தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேனி - கிருஷ்ணனுண்ணி, மதுரை - எஸ். அனிஸ்சேகர், திண்டுக்கல் - எம்.விஜயலட்சுமி. மற்றும் ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம், மதுரை வடக்கு, சோழவந்தான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
#instanews #tamilnadu #information #theni #vaigaidam #water #opening #ministers #mla #என்ஜினீர்ஸ் #participate #farmers #தண்ணீர் #திறப்பு #அமைச்சர்கள்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu