பெரியகுளத்தில் தடையை மீறி சேவல் சண்டை
பெரியகுளத்தில் தடையை மீறி சேவல் சண்டை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஆறு சண்டை சேவல்கள், ரொக்கம் ரூபாய் 200, இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில், ஆய்வாளர் முத்துமணி, சார்புஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது டாடா காபி மில்லுக்கு மேற்குப் பகுதியிலுள்ள தேக்கு மர கரடு அருகே தடையை மீறி சேவல் சண்டை நடத்தி வந்தது தெரியவந்தது, இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறையினரை கண்டதும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினார்கள். இதில் வத்தலகுண்டு, மஞ்சளார் படித்துறை தெருவை சேர்ந்த சர்தார் என்பவரது மகன் முகமது பிலால் மற்றும் வத்தலகுண்டு, காந்திநகரை சேர்ந்த கோபி மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முகமது பிலால் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மேலும் அங்கிருந்த ஆறு சண்டை சேவல்கள், 2 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூபாய் 200 ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu