முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி.
X

முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 120 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்க விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் போக விவசாயத்திற்காகவும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக விவசாயமாக நெல் பயிரிடப்பட உள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்காக வினாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் சேர்த்து ஆகமொத்தம் வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 120 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!