தேனி புதிய கலெக்டராக க.வீ.முரளிதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்

தேனி புதிய கலெக்டராக  க.வீ.முரளிதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்
X

தேனி மாவட்ட  ஆட்சித்தலைவர்  க.வீ.முரளிதரன்

தேனி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக க.வீ.முரளிதரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

தேனி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக க.வீ.முரளிதரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண்மை விற்பனைத்துறையில் இயக்குநராகவும், தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசனில் மேலாண்மை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் நலத்துறையில் இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவராக க.வீ.முரளிதரன் பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார், அதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று கொண்ட க.வீ.முரளிதரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களும் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து தரப்பு மக்களும் தங்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை எந்த நேரமும் சந்தித்து, மனுக்கள் அளிக்கலாம் என்றும், தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!