தேனி - மூன்று தவணைகளாக 1,15,490 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது

தேனி - மூன்று தவணைகளாக 1,15,490 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது
X
தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதில் 18 வயது முதல் 44 வரை உள்ள அனைவருக்கும் முதல் தவணையாக 85603 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 19593 நபர்களுக்கும், மூன்றாம் தவணையாக 10294 நபர்களுக்கும் சேர்த்து, ஆக மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 490 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கும், நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மண்டபம், தேனி நகராட்சிக்கு உட்பட்ட அன்னபராஜா திருமண மண்டபம், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் ஊராட்சி பகுதிகள் மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!