தேனி- பழங்குடியின மக்களின் பரிதாபங்கள்-நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்.
தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மக்களை பாதுகாத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முந்தல், கொட்டகுடி, குரங்கணி, காரிப்பட்டி, நரிப்பட்டி, ராசிமலை, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். போடியில் இருந்து குரங்கணி மலை கிராமத்திற்கு மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது.
தற்போது கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கையாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து மலை கிராமங்களுக்கும் பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் கால்நடையாக மட்டுமே நடந்து செல்ல முடியும். தேர்தல் சமயங்களில் குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை மலை கிராமங்களுக்கு கொண்டு சென்று, அங்கு வாக்குப்பதிவை நடத்தி விட்டு, மீண்டும் குதிரைகள் மூலமாக வாக்குப்பதிவு இயந்திரம் குரங்கணி மலை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வாகனங்கள் மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும்.
இப்பகுதியிலுள்ள மலை கிராம மக்களுக்கு வாகன வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ உதவி கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மலை கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கொட்டகுடி மலை கிராமத்தில் கடந்த சில தினங்களாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருந்துள்ளது, காய்ச்சலுக்கான சிகிச்சை மட்டும் எடுத்துக் கொண்டனர்.
தற்போது உடல் வலி, உடல் சோர்வு, உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர். தங்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், பிளீசிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனும், கவலையுடனும் உள்ளனர்.
ஆகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மலை கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று மலை கிராம கிராம மலை கிராம கிராம என்று மலை கிராம கிராம கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu