தேனி: விவசாயிகளுக்கான ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தேனிமாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினை தவிர்த்திடும் பொருட்டு, தமிழக அரசு உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது, விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்தல், விளைபொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் வேளாண் பணிக்கு செல்வதில் ஏற்படும் சிரமம் ஆகியவற்றில் ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கென மாவட்ட அளவில் கட்டுப்பாட்டுறை அறை அமைத்திட அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் 04546-250101 என்ற தொலைபேசி எண்ணிலும், 83001 08666 என்ற கைபேசி எண்ணிலும், விவசாயிகள் தொடர்பு கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் பொருட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu