தேனி : கொரோனா நோய்த்தொற்றுக்கு மனைவி இறப்பு: கணவர் மாயம்

தேனி : கொரோனா நோய்த்தொற்றுக்கு மனைவி இறப்பு: கணவர் மாயம்
X
கொரோனாவால் மனைவி இறந்த நிலையில் காணாமல் போன கணவரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே கொரோனாவால் மனைவி இறந்த நிலையில் காணாமல் போன கணவரை போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

போடி அருகே நாகலாபுரம் கெஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வைரவன் மகன் காளிராஜ் (36). இவர் மனைவியுடன் கேரளத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் உடுப்பன்சோலையிலிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் 12.5.2021 ஆம் தேதி காளிராஜின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை தேனியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து விட்டு போடி விசுவாசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் காளிராஜ் தங்கியிருந்துள்ளார். ஒரு வாரத்திற்கு பின் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து காளிராஜின் தாயார் ராஜம்மாள் (57) போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து காளிராஜை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!