தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
X
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், கோம்பையில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோம்பை ராஜாஜி வீதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 27 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். தற்போது மேலும் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கமாக வேண்டும் எனக் கூறி அரவிந்தன், இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஐஸ்வர்யாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் பேரில், போடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அரவிந்தன் உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!