தேனி- அறக்கட்டளைகள் சார்பில் ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
அறக்கட்டளைகள் சார்பில் ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள்.
தேனி மாவட்டம் , போடிநாயக்கனூர் சேவா அறக்கட்டளை, சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நம் உரத்த சிந்தனை அமைப்பு ஆகியவை சார்பில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி போடி பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் ஜி.சுப்ரமணி தலைமையிலும், அறக்கட்டளை நிறுவனரும், எழுத்தாளருமான முத்துவிஜயன் முன்னிலையிலும் நடைபெற்றது.
போடி புதுக்காலனியை சேர்ந்த முனியம்மாள், மார்க்கெட் தெருவை சேர்ந்த தனலட்சுமி, சலவை தொழிலாளி வேலு, மேலத்தெருவை சேர்ந்த சண்முகம், சந்திரன் உள்ளிட்ட பல நபர்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கனி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை அறக்கட்டளை செயலர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் நாகராஜ், கணேஷ், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் போடிநாயக்கனூர் சேவா அறக்கட்டளை, தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பணிகளுக்கான தன்னார்வ தொண்டு அமைப்பாக மாவட்ட கொரோனா தடுப்பு சேவை பணிக்கு இணைக்கப்பட்டது. சென்னை கற்பகம் அறக்கட்டளை நிறுவனர் சத்தியநாராயணனன் கானொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu