நீதா ஆம்பானியின் ஆடம்பரம் : ஒரு டீ கப் விலை ரூ.3 லட்சமாம்..!

நீதா அம்பானி (கோப்பு படம் )
நீதா அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்களில் ஒரு சிறிய தகவலை மட்டும் பார்ப்போம். பணக்காரர்களின் சொத்து மதிப்பும், ஆடம்பர சந்தையும் எப்போது செழிப்புடனே உள்ளது. உதாரணமாக கொரோனா தொற்று காலத்தில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர்ந்தது. இதேபோல் கொரோனாவுக்கு பின்பு முதன் முதலில் வர்த்தக சரிவில் இருந்து மீண்டது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்தது ஆடம்பர சந்தை தான்.
இந்தியாவில் ஆடம்பரத்திற்கும், ராஜ வாழ்க்கைக்கும் பெயர் போன முகேஷ் அம்பானி குடும்பத்தின் வாழ்க்கை முறை குறித்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் வியப்பில் ஆழ்த்துகிறது. 100க்கும் அதிகமாக ஆடம்பர கார்கள், பல கோடி மதிப்பிலான புடவைகள், 400, 600 கோடி ரூபாய்க்கு நகைகள், 15000 கோடிக்கு வீடு, சமையல்காரருக்கு மாதம் 2 லட்சம் வரையில் சம்பளம்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம், தற்போது இந்த அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு விஷயம் அம்பானி குடும்பம் குறித்து டிரெண்டாகி வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன முகேஷ் அம்பானி - நீதா அம்பானி குடும்பம் தினமும் குடிக்கும் ஒரு டீ கப் விலை என்ன தெரியுமா..?
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தங்களுடைய சொத்து மதிப்புக்கு இணங்க அவர்கள் பயன்படுத்தும் பாத்திரங்களும் அமைந்துள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம். முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய காதல் மனைவி நீதா அம்பானி தினமும் குடிக்கும் டீ கப் விலை ஒன்று 3 லட்சமாம்.
ஜப்பான் நாட்டின் மிகவும் பழமையான கிராக்கரி நிறுவனமான நோரிடெக் (Noritek) தயாரித்த கோப்பையில் நீதா அம்பானி டீ குடிக்கிறார். இந்த சீன நாட்டின் பழங்கால தொன்மையான டிசைனைக் கொண்ட இந்த டீ கப் செட்டில் ஒவ்வொரு கோப்பையும் 3 லட்சத்திற்கும் மேல் விலை கொண்டது. பழங்கால ஜப்பானிய கிராக்கரி பிராண்டின் மொத்த டீ கப் செட் மற்றும் டைனிங் செட் விலை 1.5 கோடி ரூபாய்க்கு மேல்.
ஒவ்வொரு டீ கப் உலகின் மிகச்சிறந்த சீனாவின் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது, மேலும் தங்கம் மற்றும் பிளாட்டினம் பூசப்பட்டிருக்கும் என Noritek இணைய தளத்திலேயே தெரிவிக்கப்பட்டு உள்ளது. விருப்பப்பட்டால் நீங்களும் இந்த பிராண்டின் டீ கப்-களை வாங்கலாம். யார் கேட்டாலும் விற்க தயாராக இருக்கிறோம் என Noritek அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu