தேனியில் சிறப்பு மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்கஏற்பாடு
பரிசோதனை -மாதிரி படம்.
தேனி மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தேனி மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகள், கொரோனா நல சிகிச்சை மையம், சித்த மருத்துவ நல சிகிச்சை மையம் மற்றும் இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆய்வக பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களில் நோயின் அறிகுறிகள் காணப்படாத நபர்களை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்துதல் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் தொற்று அதிகமாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் மூலம் நோய்த்தொற்று அறிகுறிகள் கண்டுள்ள நபர்களுக்கு உடனடியாக மருந்துகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நோயின் அறிகுறிகள், தனிமைப்படுத்துதலின் போது ஏற்படும் ஏதாவது சிறு தொந்தரவுகளுக்கான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மையங்களின் விபரம், சளி பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், தடுப்பூசி வழங்கும் இடம் போன்ற பல்வேறு தகவல்கள் பெறவும், தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ளுதல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கென தனி கைப்பேசி இணைப்பு எண் "9499933869" என்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவ குழுவினர் மூலம் 24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu